விமானப்படை சமையல் பிரிவினரின் விஷேட பயிற்ச்சி.
இல.03 விமான சமையலறை மற்றும் உணவு பராமரிப்பு பற்றிய ஓர் பயிற்ச்சி நெறியினை விமானப்படையின் சமையல் மற்றும் சமையல் சேவை பிரிவினருக்கு 'சிரீலங்கன்' விமான சேவையின் சமையல் பிரிவினால் கடந்த 3 வாரங்களாக அதாவது 31.01.2011 தொடக்கம் 21.02.2011ம் திகதிவரை நடாத்தப்பட்டது.

எனவே இப்பயிற்ச்சி நெறியானது இலங்கை விமானப்படையின் சர்வேதேச விமான நிலைய முகாமின் வழிகாட்டலுடன் ,விமானப்படை தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதேநேரம், இது 'சிரீலங்கன்' விமான சேவையின் உணவு தொடர்பான பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சரத் பெர்னான்டு மற்றும் சர்வதேச விமான நிலைய முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டென்' W.W.P.D.பெர்னான்டுவினாலும் தலைமைதாங்கப்பட்டது.

அதேவேளை 'சிரீலங்கன்' விமான சேவையின் முகாமையாளர் திரு.பாண்டி மற்றும் நிறைவேற்று சமையல் அதிகாரி திரு.அந்தோனி ஆகியோர் இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியதுடன் ,இப்பாடநெறியானது பல்வேறுபட்ட உணவு வகைகளின் தயாரிப்பு,போஷாக்கு பற்றிய அறிவு மற்றும் உணவு தற்காப்பு முறைகள் போன்ற பயிற்ச்சிகளையும் உள்ளடக்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை