ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான் சாரணரின் முதலாவது பயிற்ச்சி முகாம்.
11:03am on Sunday 27th February 2011
வான் சாரணர் இயக்கத்தினரின் முதலாவது பயிற்ச்சி முகாம் ஒன்ரு ,40 பிரிவுகளுடன் தியத்தலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

மேலும் இத்திட்டமானது பாதுகாப்பு செயளாலர் கௌரவ கோதபாய ராஜபக்ஷ்வின் ஆலோசனைக்கு அமைய ,தேசிய 'கெடெட்'அணியின் இயக்குனர் 'மேஜர் ஜென்ரல்' ஜயசுந்தரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதேநேரம் கூட்டுப்படைகளின் பிரதானியும் ,விமானப்படைத்தளபதியுமான  'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் இலங்கை விமானப்படையின் முக்கிய பயிற்ச்சி முகாமான தியதலாவையில் இது மேற்கொள்ளப்பட்டதோடு ,முகாமின் கட்டளை அதிகாரி'குரூப் கெப்டென்' லங்கா கொடிப்பிலி இதனை மேற்பார்வை செய்த அதேநேரம், 'ஸ்கொட்ரன் லீடர்' ஜினேந்திர ரனசிங்க இப்பயிற்ச்சி நெறியின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இவ்வாரான பயிற்ச்சி முகாமொன்று ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களை பூர்த்தி செய்யும் இவ்வேளையில் ,அன்று தொடக்கம் இலங்கை விமானப்படை அதிகாரிகளினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.

இறுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றதுடன் ,இதன் பிரதம அதிதியாக 'எயார் வைஸ் மார்ஷல்' ரோகித ரணசிங்க கலந்து கொண்ட அதேநேரம் அணி வகுப்பு மாரியாதையுடன் பயிற்ச்சியை சிறப்பாக முடித்தவர்களுக்கு பரிசில்களும்  வழங்கப்பட்டன.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை