விமானப்படை தளபதி ஓய்வு பெற்றார்
5:16pm on Tuesday 1st March 2011
இலங்கை விமானப்படைத்தளபதியும்,பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியுமான 'எயார் சீப் மார்ஷல்'ரொஷான் குணதிலக ,தனது விமானப்படை கட்டளை அதிகாரத்தினை இன்று மாலை அதாவது 27.02.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து 'எயார் வைஸ் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவிடம் கையளித்தார்.

எனவே 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக தனது பொறுப்புக்களை கையளிக்கும் வைபவம் விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமாகியதுடன் இதன் முதற் கட்டமாக விமானப்படைத்தளபதியின்  விஷேட தடியினை புதிதாக பதவியேற்கும் தளபதிக்கு ஒப்படைத்த அதேநேரம் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் நிர்வாகக்குழுவினர்,அதிகாரிகள் உட்பட ஏனைய படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

'எயார் சீப் மார்ஷல்'ரொஷான் குணதிலக அவர்கள் 2006.06.11ம் திகதியன்று விமானப்படைத்தளபதியாக பதவியேற்றதுடன்,கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு கைகொடுத்து தீவிரவாதப்பிடியில் இருந்து தாய் நாட்டினை மீட்டது மட்டுமல்லாது விமானப்படையினதும் அதன் உறுப்பினர்களினது நலனிலும் விஷேட கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொண்டார் அதாவது விமானப்படை நூதனசாலை,மாதிரி விமான வேலைத்தலம்,சீகிரிய ஆடைத்தொழிற்சாலை ,பயணிகள் ஹெலிகொப்டர் சேவை,'மாபில் பீச்' சுற்றுலா நிலையம் ,சீனக்குடா 'கொல்ப்' பயிற்சி மைதானம் போன்ற பல்வேறுபட்ட பணிகளை நாட்டின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை வள்ர்ச்சிக்காகவும் மேற்கொண்டமை விஷேட அம்சமாகும்.

'எயார் சீப் மார்ஷல்' குணதிலக இலங்கை விமானப்படையில் 13.01.1978ம் ஆண்டு ஓர் 'ஒபிஸர் கெடெட்'ஆக இணைந்து கொண்டதுடன் ,24.08.2011ம் ஆண்டு 'பைலட் ஒபிஸர்"ஆக நியமிக்கப்பட்டர்.

எனவே இவரது 28வருட சேவையில் ,பல்வேறுபட்ட பதவிகளை குறிப்பாக இல.04 ஹெலிகொப்டர் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும்,வடக்கு,கிழக்கு வலயங்களின் கட்டளை அதிகாரியாகவும் ,கடுநாயக,அநுராதபுரம்,சீனக்குடா போன்ற முகாம்களின் கட்டளை அதிகாரியாகவும் ,பிரதம மன்ற அதிகாரியாகவும் செயற்பட்டதோடு இறுதியாக இலங்கை விமானப்படையின் 12வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

எனவே இதனைத்தொடர்ந்து 'எயார் வைஸ் மார்ஷல்'ஹர்ஷ அபேவிக்ரம 13வது விமானப்படைத்தளபதியாக நாளை தனது பொறுப்புக்களை பொறுப்பேற்க இருப்பதுடன் ,'எயார் மார்ஷல் 'ஆக தரமுயர்த்தப்படவும் உள்ளார்.'எயார் வைஸ் மார்ஷல்'ஹர்ஷ அபேவிக்ரம 1980.04.19ம் திகதியன்று ஓர் விமானியாக இணைந்துகொண்டதுடன் தனது அடிப்படை பயிற்ச்சியினை நிறைவு செய்த பின்னர் ,1982.04.03ம் திகதியன்று 'பைலட் ஒபிசராக' நியமிக்கப்பட்டார்.

மேலும் இவர் பல்வேறுபட்ட பதவிகளையும் வகித்தார் அதாவது கட்டளை அதிகாரி முதலாவது தாக்குதல் பிரிவு, மேலும் பலாலி,சீனக்குடா,அநுராதபுரம்,இரத்மலானை போன்ற முகாம்களின் கட்டளை அதிகாரியாகவும்,பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் மன்றக்கல்லூரியின் போஷகராகவும் ,பிரதி பிரதம மன்ற அதிகாரியாகவும் ,வினியோகப்பிரிவின் இயக்குனராகவும்,விமான செயற்பாடுகளின் இயக்குனராகவும் செயற்பட்டமை விஷேட அம்சமாகும்..




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை