கபீர் விமான விபத்து பற்றிய ஆராய்வு
5:02pm on Friday 4th March 2011
இன்று காலை அதாவது 01.03.2011ம்  திகதியன்று யக்கலையில் வைத்து இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமின் இல.10 விமானப்பிரிவுக்கு சொந்தமான இரு கபீர் விமானங்களின் விபத்தினை அடுத்து ,விமானப்படை தனது முக்கியமானதொரு விமானியை இழந்தது.

இவ்வாறு உயிரிழந்த 'பிளைட் லெப்டினெட்' மொனாட் பெரேரா 2004ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்து கொண்டதுடன் அவர் பல்வேருபட்ட மனிதாபிமான நடவிடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் விஷேட அம்சமாகும் .

இவரது பிரிவு இல.10 விமானப்பிரிவிக்கு பாரியதொரு இழப்பு என்பதோடு இரு தாக்குதல் விமானங்களும் சுமார் 9.10 மணியளவில் கட்டுநாயக்க முகாமில் இருந்து புறப்பட்டு 6 கி.மி.க்கு அப்பால் ,யக்கலைக்கு அருகாமையில்  கிரிந்திவலையில் வைத்து விபத்துக்குள்ளானது.

இதில் காயத்துக்குள்ளான 'ஸ்கொடரன் லீடர்" வஜிர ஜயகொடி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை