விமானப்படைத்தளபதியின் இறுதி அஞ்சலி
12:35pm on Saturday 5th March 2011
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்'ஹர்ஷ அபேவிக்ரம நேற்று அதாவது 03.03.2011ம் திகதியன்று விமான விபத்தில் உயிரிழந்த 'ஸ்கொடரன் லீடர்' மொனாட் பெரேராவின் குடும்பத்தினரை சந்தித்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
 
எனவே இரு ஜெட் விமானங்களும் இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமில் இருந்து 9.10 மணியளவில் விண்ணை நோக்கி புறப்பட்டதுடன் ,சுமார் 6 கி.மி.க்கு அப்பால் யக்கலைக்கு அருகாமையில் இருக்கும் கிரிந்திவலையில் வைத்து விபத்துக்குள்ளானது,அதில் உயிரிழந்த 'ஸ்கொட்ரன் லீடர்' மொனாட் பெரேரா 2004ம் ஆண்டு விமானப்படையில் இணைந்துகொண்ட அதேநேரம் பல்வேருபட்ட மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு மற்றைய விமானத்தில் சென்ற 'ஸ்கொட்ரன் லீடர்' வஜிர ஜயகொடி சிறு காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதோடு இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ள 'எயார் வைஸ் மார்ஷல்' கபில ஜயம்பதி தலைமையிலான ஒரு விசாரணை குழுவினை விமானப்படைத்தளபதி நியமித்துள்ளார்.

எனவே 'ஸ்கொட்ரன் லீடர்' மொனாட் பெரேரா 1982.10.13ம் திகதியன்று பிறந்ததுடன் ,தனது கல்வியினை காலி மஹிந்த கல்லூரியில் கற்று பின்னர் விமானப்படையில் ஓர் விமானியாக இணைந்து கொண்டார்.

எனவே இவரது இலட்ச்சியத்துக்கு ஏற்ப 08.07.2011ம் திகதியன்று பைலட் ஒபிசராக நியமிக்கப்பட்டதோடு ,மேலும் இவர் இலங்கை விமானப்படை K-8,f- 7 விமானங்களில் பணியாற்றி காலப்போக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இஸ்ரேலிய கபீர் விமானத்திலும் பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு 'பிலைட் லெப்டினென்ட்' ஆக தரமுயற்த்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக மார்ச் 1ம் திகதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்த மொனாட் பெரேரா 'ஸ்கொட்ரன் லீடர்' தரத்திற்கு தரமுயற்த்தப்பட்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை