விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவுவிழா
12:43pm on Saturday 5th March 2011
இலங்கை விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் 02.03.2011ம் திகதியன்று மிக விமர்சியாக ஆரம்பமாகியதுடன்,  இங்கு இவரை வரவேற்கும் வகையில் விஷேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்ற அதேநேரம் ,இது ஜனாதிபதியால் பார்வையிடப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 எனவே இவ்வணிவகுப்பு மரியாதைக்காக சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட சுமார் 1400 படைவீரர்கள் பங்குபற்றியதுடன் ,இதில் ஜனாதிபதியினால் விமானப்படைக்கென வழங்கப்பட்ட 9 விஷேட வர்ணங்களும் காட்ச்சிப்படுத்தப்பட்டன.

மேலும் இங்கு ஜனாதிபதி உரையாற்றுகையில் ,விமானப்படையின் சிறந்த பயிற்ச்சியும் ,நல்லொலுக்கமும் நாட்டை தீவிரவாதப்பிடியில் இருந்து மீட்டெடுக்க உதவியது மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திக்காகவும் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இவ்விழாவினை மேலும் கவர்ச்சிப்படுத்துவதற்காக வேண்டி 'பெல் 412' ஹெலிகொப்டர்கள் தேசிய கொடியை ஏந்திய வண்ணமாகவும்,மற்றும் தாக்குதல் விமானங்கள் உட்பட முன்னர் உபயோகிப்பட்ட விமானங்களும் தமது சாகஸங்களை வெளிப்படுத்தியமை விஷேட அம்சமாகும்.

ஆரம்ப விழாவினை தொடர்ந்து விமானப்படையின் 60வது நிறைவு விழாவின் சார்பாக முத்திரை மற்றும் 2ரூபா நாணயக்குற்றியொன்றும் வெளியிடப்பட்டதுடன் ,ஜனாதிபதியினால் 60வது நிறைவு விழா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்ச்சி மற்றும் களியாட்ட பிரதேசமும் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

எனவே இந்நிகழ்வுக்கு பாதுகாப்பு செயலாளர் கௌரவ கோதாபய ராஜபக்ஷ்,'எயார் சீப் மார்ஷல்'ரொஷான் குணதிலக ,தபால் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ ஜீவன் குமாரதுங்க ,விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிரியன்கர ஜயரத்ன ,மத்திய வங்கி ஆளுனர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஜனாதிபதி செயலாளார் கௌரவ லலித் வீரதுங்க என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை