"ஸ்கொட்ரன் லீடர்" மொனாட் பெரேராவின் இறுதிப்பயணம்.
2:38pm on Monday 7th March 2011
கடந்த மார்ச் 1ம் திகதி இடம்பெற்ற கபீர் விமான விபத்தில் உயிரிழந்த "ஸ்கொட்ரன் லீடர்" மொனாட் பெரேராவின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலைஅதாவது 05.02.2011ம் திகதியன்று காலி சமனல மைதானத்தில் இடம்பெற்றது.

எனவே இவரது பூதவுடல் கிடுலம்பிடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ,இலங்கை விமானப்படையினரிடம் காலி நூதனசாலையில் வைத்து சுமார் 3 மணியளவில் கையளிக்கப்பட்டதையடுத்து ,காலி சமனல மைதானத்தில் வைத்து விமானப்படையினாரால் இறுதி கௌரவம் செலுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்.

29 வயதான "ஸ்கொட்ரன் லீடர்" மொனாட் பெரேரா 2004ம் ஆண்டு விமானப்படையில் இணைந்துகொண்டதுடன் ,வடக்கு,கிழக்கு உட்பட பல்வேறுபட்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை