இலங்கை விமானப்படையணி வெற்றி.
11:24am on Wednesday 9th March 2011
இலங்கை விமானப்படையணிக்கும் ,வத்தளை அந்தோனியர் விளையாட்டு கழகத்துக்கும் இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதற் சுற்றில் விமானப்படையணி வெற்றியீட்டியதுடன், போட்டியானது மார்ச் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை கொழும்பு ரைபல் கிறீன் மைதானத்தில் நடைப்பெற்றது.

தமது முதல் இனிங்ஸிற்காக  துடுப்பெடுத்தாடிய  விமானப்படையணி 64.3 ஒவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றதுடன் அதில் விமானப்படை சார்பாக டினூஷ பெர்னான்டு 119 ஓட்டங்களை பெற்றதுடன் ,பந்து வீச்சில் புனித அந்தோனியர் கழகம் சார்பாக சதுரங்க ரன்திம 4 விக்கெட்டுக்களையும், சப்ராஸ் பாரூக் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இனிங்ஸிற்காக துடுபெடுத்தாடிய அந்தோனியர் கழகம் 72.5 ஓவர்கள் நிறைவில் 274 ஓட்டங்களை பெற்றதுடன் அந்தோனியர் கழகம் சார்பாக ருவந்த நோனிஸ் டினேஷ் நிலங்க ஆகியோர் முறையே 72,55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பந்து வீச்சில் விமானப்படை சார்பாக ரவி ஜயவர்தன மற்றும் புத்திக சந்தருவன் ஆகியோர் முறையே 4,3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய விமானப்படையனி 50 ஓவர்கள் நிறைவில் 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ,அதில் விமானப்படை சார்பாக ராஜூ கனேஷென் 109 ஓட்டங்களையும்,டினூஷ பெர்னான்டு 117 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

இறுதியில் 248 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியர் கழகத்தினர் 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோழ்வியை தழுவினர் ,இங்கு புனித அந்தோனியர் கழகம் சார்பாக டர்ஷன ஹெட்டியாரச்சி 72 ஓட்டங்களையும் ,சப்ராஸ் பாரூக் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், பந்து வீச்சீல் விமானப்படை சார்பாக புத்திக சந்தருவன் மற்றும் ரவி ஜயவர்தன ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை  கைப்பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை