இலங்கை விமானப்படைக்கு புதிய அதிகாரிகளின் வருகை
2:37pm on Thursday 24th March 2011
தகவல் தொழிநுட்பம், இலத்திரனியல் பொறியியல், சிவில் பொறியியல் மற்றும் வினியோகம் போன்ற பிரிவுகளைச்சேர்ந்த 33 அதிகாரிகள் தமது நியமனங்களை பெற்றுக்கொள்ளும் வைபவம் 23.03.2011ம் திகதியன்று காலை 0930 மணியளவில் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் ,இங்கு இதற்கான சத்தியபிரமாணமும் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இவ்வைபவத்துக்கு இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம மற்றும் விமானப்படையின் பிரதம ஆட்சேற்பு அதிகாரி 'குரூப் கெப்டென்' H.N. அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதி இவர்களுக்கு பல அறிவுரைகளை கூறிய அதேநேரம், சிவில் உத்தியோகத்தில் இருந்து இராணுவ உத்தியோகம் வேறுபடுவதால் தாம் அவர்களிடம் இருந்து ஒரு சிறந்த சேவையினை எதிர்பார்ப்பதாகவும் வேண்டிக்கொண்டார்.
இதனை அடுத்து புதிதாக நியமனம் பெற்ற அதிகாரிகள் தமது அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்வதற்காக தியதலாவை விமானப்படை முகாமிற்கு சென்றதுடன், அங்கு அவர்கள் இல. 55 நேரடி அதிகாரிகள் பயிற்ச்சி நெறியின் கீழ் சுமார் இரண்டு மாதங்கள் பயிற்ச்சி பெற்றதன் பின்னர், விமானப்படையின் பல்வேறுபட்ட பிரிவுகளில் தமது பணிகளை தொடங்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்..