விமானப்படையின் புத்தாண்டு சந்தை.
12:51pm on Saturday 9th April 2011
இலங்கை விமானப்படையானது 2011 சிங்கள மற்றும் ஹிந்து புத்தாண்டினை முன்னிட்டு விஷேட சந்தையொன்றினை இன்று அதாவது 08.04.2011ம் திகதியன்று கொழும்பு விமானப்படை முகாம் "ரைபல் கிறீன்" மைதானத்தில் அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது
குடும்பத்தினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம  மற்றும் அவரது பாரியார் திருமதி. நீலிகா அபேவிக்ரம உட்பட விமானப்படையின் நலன்புரி இயக்குனர் "எயர் வைஸ் மார்ஷல்" W.A. சில்வா ,கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" விஜித குணரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இங்கு பாரம்பரிய முறைப்படி  மு.ப. 10 மணியளவில் பிரதம அதிதி குத்துவிளக்கு ஏற்றி சந்தையினை ஆரம்பித்து வைத்ததுடன் ,நாடெங்களிலும் உள்ள விமானப்படை முகாம்களில் இருந்தும் சுமர் 47  கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்த அதேநேரம்  ஒவ்வொரு முகாம்களில் இருந்தும் வெவ்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பித்தக்க விடயமாகும். அவையாவன,

  அரிசி - ஹிங்குரங்கொடை,அம்பாறை,மொரவெவ முகாம்கள்
  சக்கரை - கடுகுறுந்த முகாம்
  கோதுமை மா - சீனக்குடா முகாம்
  மரக்கறி வகைகள் - தியதலாவை மற்றும் சீகிரிய முகாம்கள்
  ஆடை உற்பத்திகள் - கடுநாயக்க முகாம்
  இனிப்புப்பண்டங்கள் - வீரவில முகாம்
  கடல்சார் உற்பத்திகள் - பாலவி மற்றும் பலாலி முகாம்கள் என்பனவாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை