பெசிபிக் ஏஞ்சல் வெற்றிகரமாக முடிக்கின்றன
8:56am on Wednesday 24th August 2016
இலங்கைவிமானப்படை அமெரிக்கா குடியரசின் விமானப்படையின் பசுபிக் பிராந்திய விமானப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பசுபிக் ஏஞ்சல் - 2016 இம்முறை இலங்கையின் யாழ்ப்பாணப் பிரதேசத்தைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட விருக்கின்றன. இந்த நிகழ்ச்சி இம்மாதம் 15ம் திகதியிலிருந்து 22 ம் திகதி வரை நடைபெற்றது.

பிரதேசமக்களின் சௌக்கியசுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் அவர்களின் அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பல்வைத்திய சேவைகளும் நடமாடும் சேவை ஊடாகவங்கப்பட இருக்கும் அதேவேளை இடயிக்கடுவ மகாவித்தியாலயம் ,  புங்குடுதீவூ ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் மற்றும் கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளம் ஆகிய இடங்களிலும் இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்த நடவடிக்கைகளை அடிப்படையாகச் செய்வதன் மூலம் அவசர விபத்துக்கள் ஏற்படும் போதுபசுபிக் பிராந்திய விமானப்படையூடன் சேர்ந்து இலங்கையின் படைகள் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் பயிற்சியூம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் , விமானப்படையின் நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்  அவர்கள் , விமானப்படையின் சுகாதார சேவைகள் பன்ப்பாளர் எயார் கொமடோர் லலித் ஜயவீர அவர்கள் , விமானப்படை சிவில் இன்ஜினியரிங் பனிப்பாளர் எயார் கொமடோர் ருசிர சமரசிங்க அவர்கள் , விமானப்படை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படை அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை