20வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சி நிறைவு விழா.
11:33am on Saturday 30th April 2011
20வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்ச்சியினை நிறைவுசெய்துகொண்ட 125  விமானப்படையினர் நேற்று அதாவது 29.04.2011ம் திகதியன்று வெளியாகினர் , விழாவானது பலாலி விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

எனவே இவர்கள் சுமார் 16 வாரங்கள் பயிற்ச்சினை மேற்கொண்டதுடன்  அதில் அணிவகுப்புப்பயிற்ச்சி ,துப்பாக்கி பிரயோகப்பயிற்ச்சி, வனப்பயிற்ச்சி, "கெரில்லா" பயிற்ச்சி, முதலுதவிப்பயிற்ச்சி ,தலைமைத்துவப்பயிற்ச்சி  உட்பட அடிப்படை கணணிப்பயிற்ச்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.




மேலும் இங்கு பிரதம அதிதியாக பலாலி விமானப்படையின் கட்டளை அதிகாரி
"குறூப்கெப்டன்" அதுல களுஆரச்சி கலந்து கொண்ட அதேநேரம் சிறப்பாக பயிற்ச்சிகளை
முடித்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பயிற்ச்சியின் இறுதி பெறுபேறுகள்.

சிறந்த சகல துறை செயற்பாட்டாளர் - 25171  "கோப்ரல்" விஜேசூரிய DMC
சிறந்த அணிவகுப்பாளர் - 25171  "கோப்ரல்" விஜேசூரிய DMC.
சிறந்த துப்பாக்கி பிரயோகம் - 25526  "கோப்ரல்" ஜயசிங்க MGCH
சிறந்த மாணவன் - 25379  "கோப்ரல்" குமார HMKPGR
சிறந்த உடற்பலம்- 25106  "கோப்ரல்" பதிரகே S



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை