கடுநாயக்க விமானப்படை முகாம் பற்சிகிச்சை நிலையத்தின் 36வது வருட நிறைவு விழா
12:50pm on Saturday 14th May 2011
இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாம் பற்சிகிச்சை நிலையத்தின் 36வது வருட நிறைவு விழா கடந்த வாரம் இடம்பெற்றதுடன் , இந்நிலையமானது 01.05.1975ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஓர் சிறப்பான சேவையினை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இந்நிகழ்வினை முன்னிட்டு விமானப்படையின் பற்சிகிச்சை பிரிவின் இயக்குனர் " எயார் வைஸ் மார்ஷல்" அசோக அமுனுகம அவர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும், கடுநாயக்க விமானப்படை பற்சிகிச்சை பிரிவின் கட்டளை அதிகாரி " விங் கமான்டர்" J.P.W. ஜயவிக்ரம அவர்களின் கட்டளைக்கு இணங்கவும் , இந்நிலையத்தின் வைத்திய குழாம் உட்பட ஏனைய உறுப்பினர்களால் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன் முதல் நிகழ்ச்சியாக நடமாடும் வைத்திய முகாம் மற்றும் சுகாதார கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஆகியன கடந்த 27ம் திகதியன்று கடான "சனதான" சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றதுடன், சுகாதார கல்வி தொடர்பான நாடகமும் இங்கு அரங்கேற்றப்பட்ட அதேநேரம் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கடந்த 28ம் திகதியன்று மதிப்பிற்குரிய மஹிந்த தேரர் தலைமையில் "பிரித்" உபதேசம் இடம்பெற்றதுடன் இதில் பற்சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளின் அதிகாரிகள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இதன் அடுத்தகட்டமாக புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் ஓர் சிரமதான நிகழ்ச்சியும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக பற்சிகிச்சை பிரிவின் இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' அமுனுகமவின் தலைமையில் நடைப்பெற்ற ஒன்றுகூடல்விருந்துபசாரத்தில் ஓய்வு பெற்ற பற்சிகிச்சை பிரிவு அதிகாரிகள் , தற்போது சேவை புரியும் அதிகாரிகள், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
Mobile clinic and a health education programme
Dharma Deshana
Shramadana
Dental get-together