வருடாந்த முகாம் பரிசோதனை- வீரவில .
12:04pm on Tuesday 17th May 2011
இலங்கை விமானப்படைத்தளபதி " எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தனது வருடாந்த முகாம் பரிசோதனையை கடந்த 13.05.2011ம் திகதியன்று வீரவில விமானப்படை முகாமில் மேற்கொண்டார்.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையை அடுத்து ,வீரவில முகாம் கட்டளைத்தளபதி "விங் கமான்டர்" மொஹான் பாலசூரிய அவர்கள் விஷேட அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றதுடன் ,இவ்வணிவகுப்பு மரியாதையானது "பிளைட் லெப்டினென்ட்" நுவன் குலசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது .
மேலும் இது விமானப்படைத்தளபதியின் வீரவில முகாமுக்கான முதலாவது விஜயம் என்பதோடு ,இப்பரிசோதனையின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான 12 தங்குமிட அறைகளும் திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் 2 மா மரக்கன்றுகளும் நடப்பட்டன .
அத்தோடு சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறி விவசாய நிலத்தை பார்வையிட்ட அதேநேரம் ,இல. 12 ஆளில்லா விமான ஊர்தி பிரிவினையும் , இல 02. வான் பாதுகாப்பு பிரிவினையும் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக முகாமின் அனைத்து உரிப்பினர்களிடமும் விமானப்படைத்தளபதி உரையாற்றியதுடன், முகாமின் சிறப்பான ஒழுங்கமைப்புக்காக தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்ட அதேநேரம் கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு விஷேட சன்மானங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.