தேசிய வெற்றி விழா - 2011
4:18pm on Tuesday 31st May 2011
தேசிய வெற்றி விழாவின் இரண்டாவது நிறைவாண்டு விழாக்கொண்டாட்டம் கடந்த 27.05.2011ம் திகதியன்று அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு காலிமுகத்திடல் மைதானத்தில் இடம்பெற்றது.
எனவே இவ்வெற்றிவிழாவானது கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றியினை நினைவுகூறும் வகையில் படையினரால் அணிவகுப்பு மரியாதைகள் தலைமையக அணி,கிழக்கு அணி ,வடக்கு அணி மற்றும் வன்னி அணி என நான்கு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இவ்வணிவகுப்புகளுக்கு "மேஜர் ஜென்ரல்" நந்தன உடவத்த மற்றும் "எயார் கொமடோர்" சாகர கொடகதெனிய அவர்களும் தலைமை தாங்கிய அதேநேரம் விமானப்படையின் பெல் 412, பெல் 212 ஆகிய ஹெலிகொப்டர்கள் முறையே தேசிய மற்றும் விமானப்படை கொடிகளை ஏந்திய வண்ணம் ஆகாயத்தில் பறந்ததுடன் ,தரை மார்க்கமாக ஜனாதிபதி நிறக்கொடிகளுடன் விமானப்படை வீரர்களின் அணிவகுப்புகளும் இடம்பெற்றன.
அத்தோடு இங்கு விமானப்படையின் தரைமார்க்க படைப்பிரிவின் அணிவகுப்புக்கான கட்டளை அதிகரியாக "குறூப் கெப்டென்" அதுல களுவாரச்சி செயற்பட்டதுடன் ,பெண்கள் பிரிவு அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக "ஸ்கொட்ரன் லீடர்" வருணி மெண்டிஸ் அவர்கள் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் கிழக்கு மாகாண பிரிவு அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியும் , MI17 ஹெலிகொப்டர் பிரிவின் கட்டளை அதிகாரியுமான "குறூப்கெப்டென்" கபில வனிகசூரிய அவர்கள் தலைமைதாங்கிய அதேநேரம் ரெஜிமென்ட் விஷேட படைப்பிரிவின் அணிவகுப்பினை "விங் கமான்டர்" தீப்தி ரவிஹன்ஷ அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் வடக்குபடைப்பிரிவின் அணிவகுப்பினை "குறூப்கெப்டென்" உதேனி ராஜபக்ஷ அவர்கள் இல.02 கனரக வாகன அணிவகுப்புடன் தலைமைதாங்கியதுடன் அதன் தரைமார்க்க படைப்பிரிவின் அணிவகுப்பினை "விங்கமான்டர்" கிரிஷாந்த மனம்பேரி அவர்கள் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இல.10 தாக்குதல் கபீர் விமானப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடைமையாற்றிய "குறூப்கெப்டென்" ஷெகான் பெர்னான்டு அவர்கள் வன்னி அணிவகுப்பு பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன் ,அதன் தரைமார்க்க படைப்பிரிவின் அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக "விங்கமான்டர்" சுலோச்சன மாரப்பெரும அவர்கள் தலைமைதாங்கினார்.
விமானிகளின் அணிவகுப்பினை இல.05 ஜெட் விமானப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடைமையாற்றிய "விங்கமான்டர்" சம்பத் விக்ரமரத்ன அவர்கள் தலைமை தாங்கியதுடன், MI 24 மற்றும் இல.02 ஹெலிகொப்டர் பிரிவுகளும் தமது சாகஸங்களை நடாத்தியமை விஷேட அம்சமாகும்.
அதனைத்தொடர்ந்து ஆளில்லா உளவு விமானப்பிரிவின் அணிவகுப்பினை அதன் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" மொகான் பாலசூரிய அவர்கள் தலைமை தாங்கிய அதேநேரம் வான் பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" சேனகபெர்னான்டுபுள்ளே அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ரேடார் அணிவகுப்பும் நடாத்தப்பட்டது.
மேலும் YLC 18 ரேடார் பிரிவு , USFM வான் பாதுகாப்பு ரேடார் ,40 MM ,L.70,23MM., 20 MM. , DCM போன்ற ஆயுதங்களின் காட்ச்சிகளும் , 1000KG., 500KG., 250KG, 125KG.போன்ற குண்டுகளின் காட்ச்சிகளும் இடம்பெற்ற அதேநேரம் MI 24 ஹெலிகொப்டரின் 30MM. மற்றும் 80MM. ஆயுதங்கள் , F7 விமானங்களின் PL 50E மிசைல்ஸ் ,12.7 MM ஆயுதங்களின் காட்ச்சிகள் உட்பட MIG 27 விமானங்களின் சாகஸங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு கௌரவ பிரதமர், அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயளாலர், பாதுகாப்பு அமைச்சின் செயளாலர், வெளிநாட்டு பிரமுகர்கள், கூட்டுப்படைகளின் பிரதானி,முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் என பலரும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.