420 பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்ச்சி முடித்து வெளியேறினர்
9:01am on Thursday 16th June 2011
அனைவரினாலும் எதிர்பார்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்ச்சி கடந்த 10.06.2011ம் திகதியன்று வெற்றிகரமாக தியதலாவை விமானப்படை முகாமினுள் நிறைவடைந்தது.

எனவே இவர்கள் பயிற்ச்சியின் நிமித்தம் கடந்த 23.06.2011ம் திகதியன்று  தியதலாவை விமானப்படை முகாமிற்கு வருகை தந்ததுடன், இதில் சுமார் 221 பெண்கள் ,199 ஆண்கள் என மொத்தம் 420 மாணவர்கள்  அடங்கி இருந்ததுடன் , இவர்களை தமது பெற்றோர்கள் இப்படை உறுப்பினர்களிடம் எந்தவித அச்சமும் இல்லாமல் ஒப்படைத்து இருந்தமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இப்பயிற்ச்சி நெறியானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் சுமார் 3 வாரங்களாக உடற்பயிற்ச்சி,அணிவகுப்பு,முதலுதவிப்பயிற்ச்சி ,சட்டம் தொடர்பான கல்வி, என தலைமைத்துவ பண்பினை வளர்க்கும் அனைத்து பயிற்ச்சிகளையும் உள்ளடக்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இறுதியாக இவர்கள் இப்பயிற்ச்சியினை சரிவர வழங்கிய தியதலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென் " ஜனக அமரசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகளான "ஸ்கொட்ரன் லீடர்" கனிஷ்க ஜயசேகர ,"ஸ்கொட்ரன் லீடர்" சந்தன முனசிங்க உட்பட விஷேடமாக பாதுகாப்பு செயளாலர் கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ  மற்றும் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை