"குவன் விரு பிரனாம" புலமை பரிசில் திட்டம்.
10:09am on Wednesday 29th June 2011
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "குவன் விரு பிரனாம" புலமை பரிசில் வழங்கும் வைபவம் கடந்த 25.06.2011ம் திகதியன்று சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

எனவே இப்புலமை பரிசில் திட்டமானது ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தினால் சுமார் 10- 17 வயதுக்குட்பட்ட 100 சிறுவர்களுக்கு  அவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்கும் வரையில் வழங்கப்படும் அதேநேரம் இவர்கள் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் நிகழ்வானது இரத்மலானை விமானப்படை நூதனசாலையில் பாரம்பரிய குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டதுடன்  இங்கு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் கணக்காளர் திருமதி.பிரபாவி டயஸ் வரவேற்பு உரை செலுத்தியதுடன் ,சேவா வனிதா பிரிவின் மேலதிக செயளாலர் " ஸ்கொட்ரன் லீடர்" நதீர தந்திரிகே அவர்கள் புலமை பரிசில் பற்றிய விளக்க உரையையும் ஆற்றினார்.

அத்தோடு திரு. மஹானாம தொடம்பே அவர்கள் புலமை பரிசில் பெறுபவர்களின் பெயர் பட்டியலை அறிவித்ததுடன் ,காலஞ்சென்ற "விங் கமான்டர்" திப்படுமுனுவல  அவர்களின்புதல்வர் புதல்வர் மாஸ்டர் சாமிக திப்படுமுனுவல அனைத்து மாணவர்கள் சார்பாகவும் உரை நிகழ்த்தியமையும் விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை