தலைமைத்துவப்பயிற்ச்சியின் இரண்டாம் கட்டம்.
9:03am on Wednesday 20th July 2011
பல்கலைகழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்ச்சியின் இரண்டாம் கட்டம் இலங்கை விமானப்படை தியதலாவை
முகாமினில் இடம்பெற்றது .

எனவே இப்பயிற்ச்சிக்கு சுமார் 754 பெண் மாணவர்கள் பங்குபற்றியதுடன் இங்கு
இவர்களின் பயிற்ச்சி நிறைவு வைபவம் தியதலாவை விமானப்படை "பென்லி" மைதானத்தில்
இடம்பெற்றதுடன் இங்கு பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதள்களும்  வழங்கி
வைக்கப்பட்டன.

மேலும் மாணவர்கள் கடந்த 16ம் திகதி முகாமிற்கு வருகைதந்ததுடன் இது முன்னர்
பங்குபற்றிய 420 மாணவர்களை விடவும் பாரிய தொகை என்பதனால் அவர்களுக்கு தேவையான
தங்குமிட வசதிகளும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே பயிற்ச்சியின் ஆரம்ப நிகழ்வு தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி
"குறூப் கெப்டென்" ஜனக அமரசிங்க தலைமையில் இடம்பெற்றதுடன் இங்கு அவரினால்
பயிற்ச்சி பற்றி அறிமுக உரை  நிகழ்த்தப்பட்ட அதேநேரம் பயிற்ச்சி பற்றிய சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு பயிற்ச்சியில் பிரதானமாக சுயசிந்தனை,சவால்களை எதிர்கொள்ளல்
,தலைமைத்துவம், உடற்பயிற்ச்சி, ஆளுமை விருத்தி போன்ற பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டதோடு , இங்கு இதன் நிறைவு வைபவத்துக்கு உயர்கல்வி அமைச்சர் SB
திஸநாயக்க மற்றும் தரைப்படை பிரதம மன்ற அதிகாரி மேஜர் ஜென்ரல் திசாநாயக்க
அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை