மொறிஸ் குமாரவேல் சைக்களோட்டப்போட்டி.
6:38pm on Monday 25th July 2011
இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மொறிஸ் குமாரவெல் சைக்களோட்டப்போட்டியில் இலங்கை விமானப்படை கடுநாயக முகாம் மற்றும் விமானப்படையின் சர்வதேச விமான நிலைய முகாம் ஆகியன சாம்பியன் பட்டத்தினை வென்றது போட்டியானது கடந்த 17.06.2011ம் திகதியன்று விகார மகாதேவி பூங்காவில் நடைப்பெற்றது.

மேலும் இதில் ஆண்கள் பிரிவில் 68 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில் ஜீவன் ஜயசிங்க 62 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை பொலிஸ் அணியின் சுதீர நிலங்க பெற்றுக்கொள்ள 3ம்,4ம்,5ம் இடங்களை முறையே விமானப்படையின் நவின் ருசிர ,சமந்த லக்மால்,குமார அபேசிங்க ஆகியோர் பெற பெண்கள் பிரிவில் சாம சைக்கள் கழகத்தின் நிலூகா சாமலி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் முகாம்களுக்கிடையிலான போட்டியில் விமானப்படையின் குமார NGS மற்றும் AW பெர்னான்டு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.அத்தோடு இப்போட்டியானது 7முறை டுவர் டி லங்கா போட்டியினை வென்ற மொறீஸ் குமாரவெல் அவர்களின் ஞாபகர்த்தமாக நடைபெறுவதுடன் ,அவர் 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இதில் பிரதம அத்தியாக டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.நிகால் சில்வா ,அதன் வலய முகாமையாலர் திரு.சுரேந்திர ஹெட்டி ஆரச்சி  உட்பட விமானப்படையின் சுகாதார இயக்குனர் எயார் கொமடோர் டி எம் எஸ் கருனாரத்ன ,கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விஜித குணரத்ன ஆகியோரும் இலங்கை விமானப்படை சைக்களோட்ட கழகத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்ஹல  அதன் செயளார்  சுஜீவ சேனாரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

<
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை