கண் டி தலதா மாளிகையில் இலங்கை விமானப்படையின் வைத்திய பரிசோதனை மருத்துவ முகாம்
9:27am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் கட்டளைக்கு இணங்க இலங்கை விமானப்படையின் வைத்திய பிரிவு உயர் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ( வைத்தியர் ) எல் ஆர் ஜயவீர அவர்களும் பல்வைத்திய பொறுப்பு உயர் அதிகாரி எயார் கொமடோர் ( வைத்தியர் ) டவ்லீவ் .கே வீரசேகர அவர்களினதும் தலைமையின் கீழ் வருடாந்த வைத்திய மற்றும் பல்வைத்திய மருத்துவ முகாம் 02 வது முறையாக கடந்த 2018 அக்டோபர் 11 ம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதற்காக கண்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் 07 பேறும் வைத்தியர்கள் 16 பேறும் வைத்திய உதவியாளர்கள் 147 பேறுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது இந்த வைத்திய முகாமில் தேரர்கள் 156 பேறும் 406 பொது சிவில் மக்களும் களந்து கொண்டனர்.
மேலும் கொழும்பு விமானப்படை வைத்தியசாலை கட்டளையிடும் அதிகாரி குரூப் கேப்டன் (வைத்தியர் ) ஜீ ஏ டப்லிவ் . பத்மபெரும அவர்களும் பல்வைத்திய பொறுப்பு அதிகாரி குரூப் கேப்டன் (வைத்தியர் ) ஜீ ஜீ திசாநாயக்க அவர்களும் களந்து கொண்டனர் இதன்போது இலவசமாக வைத்திய பரிசோதனை , மருந்துகள்,காண்பரிசோதனை, மற்றும் கண்ணாடிகள், ஈ சீ ஜீ பரிசோதனை, பல்வைத்திய பரிசோதனை என்பன ஏற்ட்பாடு செய்யப்பட்டு இருந்தது.