இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் 23ம் வருட நினைவு தினம்
11:07am on Wednesday 5th December 2018
ஹிங்குரகொட  விமானபடை தளத்தின் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின் 23ம் வருட நினைவு தினம் கடந்த  2018 நவம்பர் 24ம் திகதி  இடம்பெற்றது .

இந்த நிகழ்வின்  ஆரம்ப நிகழ்வாக  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவினரால்  விசேட  அணிவகுப்பு  நிகழ்வும்  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின்  உயிர் தியாகம் செய்தவர்களுக்கு  நினைவு செலுத்தும் வகையில் மலர் மாலை கொண்டு அவர்களின் நினைவு தூபியில்  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமான்டேர்  குலதுங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து   இந்த  கொண்ட அனைவருக்கும்  காலை உணவு எட்டிபாடு செய்யப்பட்டு இருந்தது.

குரூப் கேப்டன்  ரொட்ரிகோ அவர்களினால்  தொடங்கப்பட்ட ஹெலிகாப்டர் படைப்பிரிவு, எங்கள் தாயகத்தை மீளமைக்கும் பெரும் பணிக்காக மகத்தான பங்களிப்பை அளித்தது.

09 வது தாக்குதல் ஹெலிகாப்டர் படை, ரஷ்யா  நாட்டின் தயாரிக்க பட்டMI-24 ஹிண்ட் ஹெலிகாப்டர்கள் மற்றும் MI17 ஹெலிகாப்டர்கள்  மூலம் பாதுகாப்பை வழங்குகிறது அதேபோல் . இந்த ஹெலிகாப்டர்கள் மூலம்  இராணுவத்திற்கும் கடற்படைக்கும் பெரும் பாதுகாப்பயும் பங்களிப்பையும்  அளிக்கின்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை