2018 ம் ஆண்டு வினா விடை பொது அறிவு நிகழ்வில் இலங்கை விமானப்படை ரத்மலான படைத்தளம் வெற்றி
7:56pm on Wednesday 12th December 2018
ஓய்வு பெற்ற  படை அதிகாரிகளின் சங்கத்தினால்  ஏட்பாடு செய்யப்பட  2018 ம் ஆண்டு  ஓய்வு பெற்ற  படை அதிகாரிகள் வினா விடை போட்டியில் ரத்மலான  விமானப்படை அதிகாரிகள்  குழு வெற்றி பெற்றனர்.

இந்த போட்டிகள்  போரலஸ்கமுவ  கோல்டன் ரோஸ் கலைக்கூடத்தில்  கடந்த 2018  டிசம்பர் 01 ம் திகதி  இடம்பெற்றது   இந்த போட்டி  நிகழ்வில்  முப்படை கனிஷ்ட  அதிகாரிகளின்   பொதுஅறிவு விருத்தி செய்யும் நோக்கில்  இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போட்டி நிகழ்வுக்காக  முப்படை அதிகாரிகள் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அனைத்து விமண்படை அதிகாரிகளும் சுமார் 100 ம் மேற்பட்ட அதிகாரிகள் களந்து கொண்டனர்.இதன் பொது இலங்கை மற்றும் உலக வரலாறு, விளையாட்டு, விஞ்ஞானம்,தற்போதைய விவகாரங்கள் மற்றும் நீதி தொடர்பாக  திறந்த பரீட்சை ஒன்று நிகழ்த்தப்பட்டது.

இதன் பொது ஸ்கொற்றன் ளீடர்  ரண்சிங்க்கே மற்றும் ஸ்கொற்றன் ளீடர் மதுராவல  மற்றும் பிளைன் ஒபிஸ்ர்  சொய்சா ஆகியோர் ரத்மலான  விமானப்படை  சார்பாக கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில்  வெற்றி பெற்ற ரத்மலான விமானப்படை அணியினருக்கு100,000/= ரூபாய்  பணப்பரிசில் மற்றும் வெற்றி கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது   இதனை பிரதான அதிதியக  களந்து கொண்ட  இராணுவப்படை தளபதி லேப்ட்டினால் ஜெனரல்  மகேஷ் சேனநாயக்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது  விமானப்படை  பிரதான படைத்தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும் மற்றும் முப்படை ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் களந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை