2019 விமானப்படை தளபதி வெற்றிக் கிண்ண கோல்ப் போட்டிகள் சீனவராய
6:52pm on Tuesday 5th February 2019
இலங்கை விமானப்படை  மற்றும்  ஈகிள் கோல்ப் லிங்க் ஆகியோரின் அனுசரணையில் 2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை தளபதி வெற்றிக்  கிண்ண  கோல்ப்  போட்டிகள் கடந்த 2019 ஜனவரி 19 ம் திகதி திருகோணமலை சீனவராய விமானப்படை தளத்தின் கோல்ப் மைதானத்தில்  முடிவுக்கு வந்தது   

இந்த போட்டியில் 76 உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.   ஈகிள் கோல்ப் லிங் மைதானத்தில் ‘Handicap Rules’ முறையின் கீழ் காலை 07 00 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது

விமானப்படை தளபதி வெற்றிக்  கிண்ண  கோல்ப்  போட்டிகளில்  ஆண்கள் பிரிவில் 32 புள்ளிகளை பெற்று ஜானக்க தெபுவன சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார் 28 புள்ளிகளை பெற்று கேன் த அல்விஸ் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டார் அத்துடன் நீண்டதூர பியோகத்துக்கான விருதை  கடற்படையை சேர்ந்த பீ  எம்  முன்முல்லகே  மற்றும் ரொஹான்  தி சில்வா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்   இதே நேரம்  பெண்கள் பிரிவில் 31 புள்ளிகளை பெற்ற  கொண்டமானோரி  ஜயகொடி சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார்  இதில் நீண்ட பிரயோகத்துக்கான  விருதை இலங்கை விமானப்படையை  சேர்ந்த பிரியதர்சனி மற்றும் நிலு ஜயதிலக்க ஆகியோர் சூபிகரித்துக்கொணடனர்.

இம்முறை  வெற்றியாளர்களுக்கான  பரிசுகளை வழங்கும் வைபவம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் வழங்கிவைக்கப்பட்து  இதன்போது இராணுவ தளபதி லேப்ட்டினால் ஜெனரல்  மகேஷ்  சேனநாயக்க  மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி  எயார் சீப் மார்ஷல்  ஜெயகத் வீரக்கொடி ,விமானப்படை  பிரதான கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை கோல்ப் குழுவின் தலைவர் போட்டிஏற்டபாட்டுக்குழுவின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல்  சதர்சன பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.    

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை