இலங்கை விமானப்படையின் 68 வது வருட நினைவை முன்னிட்டு சிவனொலி பாதமலை பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டம் 02 வது வருடமாக.
11:57am on Friday 5th April 2019
இலங்கை விமானப்படையின் 68 வது  வருட  நினைவை முன்னிட்டு  சிவனொலி பாதமலை நடைபாதை பிரதேசத்தில்  சிரமதான வேலைத்திட்டம் ஓன்று கடந்த 2019 மார்ச் 06 07 ம் திகதிகளில் இடம்பெற்றன. இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தும் 02 வது  முறையாக இடம்பெறுவது குறிப்பிட்டதக்கது  கடந்த 2018 ம் ஆண்டு  முதல் முறையாக இடம்பெற்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம்  சிவனொளி பாதமலைக்கு  வருகை தரும் யாத்திரியர்களால்  வீசப்படும்  பொலித்தீன் கடதாசி மற்றும்  குப்பைகூளம்கள் என்பன அகற்றப்பட்டு  சுத்தம் செய்யப்பட்டது. இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சிவனொளி பாதமலைக்கு வருகிறார்கள்.இந்த யாத்ரிகர்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் கழிவுகளை வீசுவதால் , இதனால் சுற்றுச்சூழலின் அழகு மற்றும் அழகு  என்பவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது.  

இந்த சுதத்தம் செய்யும் வேலைத்திட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மவுஸ்ஸாகேல  சமன் தேவலாயத்திற்கு விஜயம் செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.நல்லதண்ணி  பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட  இந்த வேலைத்திட்டம்  சிவனொளி பாதமலை  உடமழுவ பகுதி வரை  இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றன.

மேலும் ரத்னபுர குருவிட்ட பாதையும் விமானப்படை  வீரர்களால்  சுத்தம் செய்யப்பட்டது  இந்த நிகள்வுகள்  அனைத்தும்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  வர்ண குணவர்தன அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.    

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை