டயலொக் க்ளிஃபோர்ட் ரக்பி கோப்பை இறுதிப்போட்டியின் ஒரு நினைவு.
3:41pm on Wednesday 24th April 2019
டயலொக் ரக்பி கிளிஃபோர்ட் கிண்ண இறுதி போட்டிக்கு  இலங்கை விமானப்படை  மற்றும் ஹெவ்லொக் அணியினரும்  தகுதி பெற்றனர்.

இலங்கை விமானப்படையின்  ரஃக்பி  வரலாற்றில்  1986 ம் ஆண்டுக்கு பிறகு இதுவே  முதல்  தடவையாக  பிரதான  ரஃக்பி  போட்டிகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சந்தர்ப்பம் ஆகும். 1986 ம் ஆண்டு  லட்சுமண் கல்தேறவின் தலைமையில் போலீஸ் படையணியை  எதிர்கொண்டு 32-23 எனும்  கோல் கணக்கில் போலீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

33 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த  விமானப்படை அணியினர்  ஹவேலோக் அணியினரிடம் 40-21 எனும் கோல் கணக்கில்  தோல்வியடைந்தது.இந்த போட்டிகளில்  சுற்றில்  21-14 எனும் கணக்கில் ஹவேலோக் அணியினர் முதல்மை வகித்தமை குறிப்பிட தக்கது விமானப்படையின் இல 15  கொண்ட சேரின் செனவிரத்ன வினால் இந்த போட்டி ஆரம்பிக்க பட்டது என்பது குறிப்பிட தக்கது.

இந்த போட்டிகளில் விமானப்படை சார்பாக  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  மற்றும்  விமானப்படை தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள  டயஸ்  மற்றும் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.  



1986 - SLAF Rugby Champions



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை