இலங்கை விமானப்படையின் 17 வது தளபதி கடமைகளை பொறுப்பேற்றுக்கும் வைபவம் விமானப்படை தலைமைக்காரியாலத்தில்.
4:31pm on Friday 14th June 2019
இலங்கை விமானப்படையின் 17வது   தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் 2019 மே 30 ம் திகதி  சுபநேரத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில்  கடந்த 2019 மே 29 ம் திகதி  அவர்  விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து அவர் எயார் மார்ஷல் நிலைக்கு  பதவி உயர்த்தப்பட்டார்.

விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால்  அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை அடுத்து  17 வது  விமானப்படை தளபதியாக  முதல் தடவையாக  அவர் அனைவருக்கும் முன்னிலையில் உரைநிகழ்தினார். இந்த நிகழ்வில் அனைத்து விமானப்படைகளிலும் உள்ள அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியராகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்  மேலும் நேரடியா அனைத்து விமானப்படை தளங்களுக்கும்  இந்த நிகழ்வு ஒளிபரப்பட்டது.

விமானப்படை தளபதியாக ஜனாதிபதி அவர்களினால்  தெரிவு செய்யப்பட்டமைக்கு  ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி  தெரிவித்தார் மேலும் விமானப்படைக்கு தமது சிறந்த சேவையை அவர் ஆற்றுவார் என்றும் இந்த இடத்தில்  வாக்குறுதியளித்தார்.
 
அதேபோல்  விமானப்படை  தளபதியாக  அவர் பொறுப்பேற்றதை முன்னிட்டு சத்தியப்பிரமாணம் செய்தார். 68 வருடமாக விமானப்படையின்  வளர்ச்சி பற்றியும் நினைவுபடுத்தி அதுதொடர்பாக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தாய்நாட்டுக்காகவும் தீவிரவாத  தாக்குதல்  சம்பந்தமாக  விமானப்படையின் பொறுப்புப்பற்றியும்  கடமை பற்றயும் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இறுதியாக  விமானப்படை  அதிகாரிகள்  படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் அவரக்ளின் குடும்ப அங்கத்தவர்கள்  அனைவருக்கும்  செழிப்பான மகிழ்ச்சியான வாழ்கை அமைய பிராத்திப்பதாக கூறி உறையை நிறைவு செய்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை