இல.38 ஆயுத பயிற்ச்சியாளர்களின் பயிற்சி நிறைவு விழா.
3:06pm on Thursday 11th August 2011
81 விமானப்படை வீரர்கள் கடந்த 31.08.2011ம் திகதியன்று ஆயுதப்பயிற்சியினை நிறைவு செய்து கொண்டு வெளியாகினர் ,பயிற்சி நிறைவு விழாவானது தியதலாவை விமானப்படை முகாமினில் அதன் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" ஜனக அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

எனவே இவர்களது பயிற்சி நெறியானது கடந்த 5 மாதங்களாக இடம்பெற்றதுடன் பயிற்சி நிறைவுவிழாவின் இறுதியில் அவர்களுக்கான விஷேட தடி ,லென்யார்ட் மற்றும் சிறந்த
வீரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இப்பயிற்ச்சி நெறியானது கடந்த 21.03.2011ம் திகதி முதல்  பட்டிபொல, லொக்கல் ஒய,விமானப்படை அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் இடம்பெற்ற அதேநேரம் இவைகளை பிரதான ஆயுதப்பயிற்சி அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" அநுர பெரேரா மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் பின்வரும் படைவீரர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப விஷேட சன்மானங்களும் வழங்கப்பட்டன அவையாவன.

சிறந்த ஆயுத பயிற்சியாளார்- 24707 - கோப்ரல் பிராங்க்

சிறந்த உடற்பலம் - 24513  கோப்ரல்  தர்மபால

சிறந்த அணி வகுப்பு- 24448 கோப்ரல்  பண்டார

சிறந்த ஆயுதப்பிரயோகிப்பாளர்- 21923 கோப்ரல் முத்கித குமார

அத்தோடு இதன் இறுதியில் இவர்கள் விஷேட அணிவகுப்பு மரியாதைகளுடன் வெளியேறிய அதேநேரம் மிக விரைவில் பல்வேறு விமானப்படை முகாம்களிலும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை