ஜப்பான் இலங்கை நற்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு தாராள மனதுடன் விசேட நன்கொடைகள் வழங்கப்பட்டது .
3:45pm on Friday 2nd August 2019
ஜப்பான் இலங்கை நற்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு   கடந்த 2019 ஜூலை 22 ம் திகதி   தாராள மனதுடன்  விசேட நன்கொடைகள்  வழங்கும் வைபவம் கொழும்பு விமானப்படை  தலைமைக்காரியாலத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இதன் போது வருகை தந்தவர்களை   பாரம்பரிய  தீபம் ஏற்றும் வைபவத்துக்காக விமானப்படை நடன ழுவினால்  நடனம் மூலம்   வரவேற்று அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்பு  விமானப்படை தீயணைப்பு பிரிவு அதிகாரி விங் கமாண்டர் சந்தன ரத்நாயக்க அவர்களால் வரவேட்புரை நிகழ்த்தப்பட்டது.

வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக விமானப்படை  சேவையாளர்களின் உயர்தரம் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது .மேலும் 200 மூக்குக்கண்ணாடிகள் சேவா வனிதா பிரிவுக்கு வழங்கி வைக்கப்பட்டது இதனை சேவா வனிதா பிரிவின் செயலாளர் ஸ்கொற்றன்  ளீடர்  பியூமி ஜயசுந்தர அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது

ஹிஷிமா டைகோ குழுமத்தின்  திரு.டோஜி அவர்களும் அவரது பாரியரினாலும் தீயணைப்பு உபகரணம்கள் விமானப்படை தளபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதனை தொடர்ந்து வைத்தியர்.லால் திலகரத்ன மற்றும்  திருமதி கோமஸே நோரிகோ அவர்களினால் கோல்ப் உபகாரணம்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உபகாரணம்களை விமானப்படை தளபதி அவர்களுடன் விமானப்படை கோல்ப் சங்க தலைவரும் விமானப்படை தலைமை தளபதியுமான எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஸன பத்திரன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நன்கொடைகளைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக பல சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள் விழாவின் போது வழங்கப்பட்டன.மேலும் ஜப்பானிய தூதுக்குழுவிற்கு ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகளை கலந்துகொண்டனர்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை