இல. 36 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்றக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.
9:33am on Wednesday 17th August 2011
இல.36 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்ற பயிற்ச்சி நெறியின் பட்டமளிப்பு விழா கடந்த 14.06.2011ம் திகதியன்று சீனக்குடா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

எனவே இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் இங்கு விமானப்படைத்தளபதி கனிஷ்ட மற்றும் மன்றக்கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினையும் திறந்து வைத்தார்.

மேலும் இங்கு விமானப்படையைச்சேர்ந்த சுமார் 23 அதிகாரிகள் ,தரைப்படையைச்சேர்ந்த 04 அதிகாரிகள் , கடற்படையைச்சேர்ந்த 04 அதிகாரிகள் என மொத்தம் 31 அதிகாரிகள் இங்கு பட்டம் பெற்றதுடன் இவர்களுக்கான  பட்டம் களனி பல்கலைகழகத்தினால் வெளிவாரிப்பட்டம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இங்கு பங்குபற்றிய அதிகாரிகளுக்கு சுமார் 14 வார முழுநேர பயிற்ச்சி நெறி வழங்கப்பட்ட அதேநேரம்  இவர்களுக்கு பேச்சுப்பயிற்ச்சி ,உடற்பயிற்ச்சி,கல்விச்சுற்றுலா என்பனவும்  வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு விஷேட பரிசில்களை பெற்றுக்கொண்டோரின் பெயர் விபரங்கள் வருமாரு.

சகல துறை சிறந்த செயற்பாட்டாளர்.
"ஸ்கொட்ரன் லீடர் " தஸநாயக்க

சிறந்த புத்தக வாசிப்பாளர்.
"ஸ்கொட்ரன் லீடர்" ஜயவிக்ரம

சிறந்த விளையாட்டு வீரர்.
"மேஜர்" நானயக்கார

சிறந்த முகாமைத்துவ திறன்.
"ஸ்கொட்ரன் லீடர்" தஸநாயக்க

சிறந்த பொதுப்பேச்சாளர்.
"லெப்டினென்ட்" வன்னிஆரச்சி

சிறந்த பத்திரிகை திறன்.
"ஸ்கொட்ரன் லீடர்" லங்காதிலக

சிறந்த வகுப்பறையாளர்.
"ஸ்கொட்ரன் லீடர்" தஸநாயக்க



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை