இலங்கை விமானப்படை அங்கத்தவர்களுக்கு "குற்றவியல் விசாரணை" குறித்த பயிற்ச்சி பட்டறை.
3:51pm on Tuesday 10th September 2019
நிர்வாக சட்டப்பிரிவால் இலங்கை  விமானப்படை  ஒழுக்காற்று  பணிப்பாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை  விமானப்படை  ஒழுக்காற்று அங்கத்தவர்களுக்கு  "குற்றவியல் விசாரணை" குறித்த பயிற்ச்சி பட்டறை கடந்த 2019 ஆகஸ்ட் 19- 21 ம் திகதி வரை  விமானப்படை தலைமைக்காரியாலத்தின் கேட்போர்கூடத்தில்   இடமபெற்றது  

இந்த வேலைத்திட்டன் மூலம்   விமானப்படை  ஒழுக்காற்று அங்கத்தவர்களுக்கு குற்ற விசாரணை , குற்றவியல் வழக்கு மற்றும் குற்றவியல் பாதுகாப்பு குறித்து கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வளர்ப்பதே இதன்  முக்கிய நோக்கமாகும்.

பிரதி வழக்கறிஞர்  ஜெனரல்  திரு. சுதர்ஷனா டி சில்வா , வழக்கறிஞர்  திரு. நுவான் தில்ஹான் ஜெயவரவர்தன , வழக்கறிஞர் திரு.விஸ்வ விதானகமகே , குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு. திரு.சனகா டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு மிஹிந்து அபேசிங்க,குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு .சம்பத் சேனரத்ன  ,இலங்கை போலீஸ்  பிரிவின் காவல்  ஆய்வாளர் திரு.பிரகீத் பிரேமசிரி , போலீஸ்  ஆய்வாளர்  திரு.நிரோஷன் கலுத்தரகோரலா  ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை