விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புலமை பரீட்சை விருதுவழங்கும் வைபவம்.
4:01pm on Tuesday 10th September 2019
விமானப்படை  சேவா வனிதா பிரிவினால்  புலமை பரீட்சை  விருதுவழங்கும் வைபவம்  கடந்த 2019 ஆகஸ்ட் 22ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலத்தின் கேட்போர்கூடத்தில்  இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதான அதிதியக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்த உதவித்தொகை திட்டத்தின் நோக்கம் நாட்டிற்காக உயிரை இழந்து ஊனமுற்ற விமானப்படை போர்வீரர்களின், மற்றும் சேவையில் உள்ள படைவீரர்களின், விமானப்படை  சிவில் ஊழியர்களின் , சிறுவர் சிறுமியர்களுக்கு  தரம் 5 தொடக்கம் கா.போ.உ .தர வரை கல்வி உதவி  புலமைப்பரிசில் வழங்குவதாகும் இதன் போது  200  விண்ணப்பம்களில்   23 பேருக்கு புலமை பரிசில் தொகை வழங்கி வைக்கப்பட்டது.  

மேலும், க.பொ.த சாதாரண நிலை தேர்வு 2018 இல் சிறந்து விளங்கிய ஏ -9 சிறப்பான சித்திகளை பெற்ற விமானப்படை சேவைப் பணியாளர்களின் பதினொரு குழந்தைகளுக்கு சேவா வனிதா பிரிவவினால்  நிதிமற்றும்  பரிசுகளும்  வழங்கிவைக்கப்பட்டது.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  அவர்கள்   கல்வி உதவித்தொகை பெற்றவர்களுக்கு அவர்களின் எதிர்கால கல்விக்கு வாழ்த்து தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் விமானப்படை  அதிகாரிகள், சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் உதவித்தொகை பெற்றவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை