2019ம் ஆண்டுக்கான நீர்காகம் கூட்டுப்பயிற்ச்சி நிறைவுக்கு வந்தது.
11:10am on Monday 30th September 2019
2019ம் ஆண்டுக்கான நீர்காகம்  கூட்டுப்பயிற்ச்சி  “ஆபத்தான போர்கள்” எனும்  கருப்பொருளில்  முப்படை பாதுகாப்பு பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பங்கேற்பில்  கடந்த 2019 செப்டம்பர் 23ம் திகதி குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது. முப்படை தளபதிகள் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் நாட்டு அதிகாரிகள்  போன்றோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

கமாண்டோ ரெஜிமென்ட், விசேட படைப்பிரிவு  ,  இலங்கை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவு  மற்றும் கடற்படை விசேட  படகு படை என்பன  சிறிய குழுக்களை நிறுவுவதன்  மூலம்  குச்சவேலியில் எதிரி தளங்களை கைப்பற்றுதல்  அவர்களின் கடைசி தாக்குதல் எதிர்கொள்ளுதல் போன்ற பயிற்சிகளில்  ஈடுபட்டனர்  இது முழு செயல்பாட்டின் உச்சக்கட்டமாகும்.

வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகளின் பங்கேற்பு  இந்த பயிற்சிக்கு  மிகவும்  மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது விமானப்படையினால்  பாராசூட் வீரகளை கொண்டுசெல்லல் , காயமடைந்தவர்களை மீட்பது, வான்வழி போர் மற்றும் மீட்பு பணிகள் என்பன மேற்கொள்ளப்பட்டன.

இந்த போர் படியிற்சி பற்றி கருத்துரைத்த விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கூறுகையில் இராணுவத் தயாரிப்பு மற்றும் செயல்பாட்டு வெற்றிக்கு கூட்டுப் போர் பயிற்சிகள் மிக முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.குரூப்  கேப்டன் தினேஷ் ஜெயவீரா 2019 நீர்காகம்  போர் பயிற்சியின் மூத்த விமானப்படை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை