விமானப்படையின் வான்வெளி நடமாட்ட வளாகம் திறப்பு விழா
3:44pm on Monday 29th August 2011
விமானப்படை கடுநாயக்க முகாமினில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வான்வெளி நடமாட்ட வளாகம் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

எனவே விழாவானது விமானப்படைத்தளபதியின் வருகையைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றியதன்  பின்னர் ஆரம்பமாகியது.

மேலும் இக்கட்டிடத்தொகுதியானது இரு மாடிக்கட்டிடத்தொகுதிகளையும் ,28 அறைகளையும் கொண்டுள்ள அதேநேரம் இவை ஒவ்வொன்ரும் 3 படுக்கையறைகள் ,குளியலறை, சாப்பாட்டறை,சமையலறை உட்பட வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளமையும் விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் ஏகலை தொழில் பயிற்சிக் கல்லூரி முகாமின் கட்டளை அதிகாரி 'குறூப் கெப்டென்' லக்சிரி குணவர்தன, ஏகலை முகாம் சேவா வனிதா பிரிவின் தலைவி 'விங் கமான்டர்' சந்திரிக்கா கடவரகெ, பயிற்சிக் ஆணை அதிகாரி 'விங் கமான்டர்' எச்.ஆர். தேவமித்த, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை