விமானப்படை சமையல் பொறுப்பாளர்கள் மற்றும் கேட்டரிங் உதவியர்களுக்காண சிறப்பு விருந்தினர் நிகழ்வுகளின்போது சேவை வழங்கல் குறித்த பயிற்சி.
10:45am on Tuesday 15th October 2019
விமானப்படை  சமையல் பொறுப்பாளர்கள்  மற்றும்   கேட்டரிங் உதவியர்களுக்காண சிறப்பு விருந்தினர் நிகழ்வுகளின்போது  சேவை வழங்கல் குறித்த பயிற்ச்சி நெறி  சிகிரியா விமானப்படை  தளத்தில் உள்ள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில்  இடம்பெற்றது. விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களில் வழிகாட்டலின்கீழ்  விமானப்படை  பயிற்சி பணிப்பாளர்  மற்றும் விமானப்படை  வழங்கல் பணிப்பளார்  ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி திட்டம் ஆறு நாட்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது.சமையல் பொறுப்பாளர்கள்  மற்றும்   கேட்டரிங் உதவியர்களுக்கான  தற்போதைய தொழில் பயிற்சி திட்டங்களின் விரிவுபடுத்த்தும் முகமாக  இந்த பயிற்சிநெறி இடம்பெற்றது . இலங்கை விமானப்படையில் சிறப்பு விருந்தினர்களின் சேவை திறனை மேம்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இரண்டு அதிகாரிகள் உட்பட 46 சேவை பணியாளர்கள்  இந்த பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர். இதன்போது  மேற்கத்தேய மற்றும் இந்திய,  தாய்லாந்து , மற்றும் டங்கு உணவு மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு சமையல் வகைகளைத் தயாரிப்பது குறித்த நடைமுறை பயிற்சியில் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் பயிற்சியாளர்களால் உணவு வழங்கல், திய உணவு / இரவு உணவு ஏற்பாடுகள், வைன் மற்றும் மதுபானம், புதிய காக்டெய்ல் தயாரித்தல் மற்றும் நிகழ்வு திட்டமிடல் குறித்த நடைமுறை பயிற்சியிலும் அவர்கள் பங்கேற்றனர்.

நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சி அளிப்பதற்காக ஹொட்டேல் ட்ரோபிகள் லைஃப்  , அரளிய ரெசொர்ட் ,ஹெரிட்டேச் கண்டலம ,ஹபரான விலேஜ் மற்றும் சிகிரியா விலேஜ் ஆகியே ஹொட்டேல்களின்  அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த பாடநெறிகள் மூன்று கட்டம்களாக பயிற்சியாளர்களால் சிறப்பு விருந்தினர் நிகழ்வுகளின் போது சேவை வழங்கல் பற்றிய விரிவான பயிற்சிகளை பயிற்சிகள் வழங்கப்பட்டன .  

இந்த இறுதி நிகழ்வில்  சிகிரியா விமானப்படை  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் மற்றும் பயிற்சிப்பாடசாலை அதிகாரிகள் படைவீரர்கள்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை