2019 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது நிகழ்வில் சீனவராய விமானப்படை தளத்திற்கு தங்க விருது .
7:00am on Tuesday 12th November 2019
சீனவராய விமானப்படை   தளம்  கடந்த 2019 அக்டோபர் 29 திகதி தாமரை தடாகத்தில் கலையரங்கில்  இடம்பெற்ற  ஜனாதிபதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது  நிகழ்வில் சுற்றுச்சூழலில் சிறந்த அரசு நிறுவனத்திற்கான தங்க விருதை வென்றது.

சுற்றுச்சூழல் நட்பு  மனப்பான்மையை வெளிப்படுத்திய மற்றும் சுற்றுச்சூழலில்  வேர்களை நீடித்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் மாசு இல்லாத சூழலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விருதுகளுக்காக வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க  கலப்பரீட்சைணையின் பிறகு   நடுவார்களால் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
வரலாற்றில்  முதல்முறையாக  இலங்கை  விமானப்படைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு  தொடர்பாக  இந்த விருதுகள்  கிடைக்கப்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை சோஷலிச ஜனநாயக  குடியரசின்   தலைவர்  அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார் இதன்போது  அவர் இந்த தங்க விருதை  சீனவராய  கல்விப்பீட  விமானப்படை தல கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிவைத்தார் .
 
மேலும்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் , நிர்வாக தர கண்காணிப்பு அதிகாரி  எயார் கொமடோர் லீலாரத்தன மேலும்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் , நிர்வாக தர கண்காணிப்பு அதிகாரி  எயார் கொமடோர் லீலாரத்தன   மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை