2019 உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற விமானப்படை வீராங்கனை கோப்ரல் லியனாராச்சி மற்றும் விமானப்படை விளையாட்டு வீரவீராங்கனைகள் நாடு திரும்பினார் .
7:02am on Tuesday 12th November 2019
சீனாவில் இடம்பெற்ற 07 வது    உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில்  கலந்துகொண்ட  இலங்கை விமானப்படையின்  வீரவீராங்கனைகள்  கடந்த 2019  அக்டோபர் 29 ம் திகதி  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு   வருகை தந்தனர்  அவர்களை     விமானப்படை  அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரினரால்  வரவேற்கப்பட்டார்கள்.

1995 ம் ஆண்டு   தேசிய இராணுவ விளையாட்டு கவுன்சிலினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் 04 வருடத்திற்கு  ஒருமுறை   இராணுவ விட்டு வீரவீராங்கனைகளுக்காக இடம்பெறும்  போட்டியாகும்.

இந்த ஆண்டு 7 வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் 109 நாடுகளைச் சேர்ந்த 9574 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.இந்த விளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களில் 80% நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள்.

இந்த போட்டிகளில்  800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை பெண்கள் தடகள வீராங்கனை  கோப்ரல் நிமாலி லியானராச்சி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா, ருமேனியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை