
தேசிய கபடி போட்டிகளில் இலங்கை விமானப்படை ஆண்கள் அணியினர் வெற்றி
தேசிய கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை அணியினர் இராணுவப்படை அணியினரை தோற்கடித்து வெற்றிபெற்றனர் இந்த போட்டிகள் கடந்த 2020 பெப்ரவரி 14 தொடக்கம் 16 வரை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டிகளில் விமானப்படை அணியினர் இராணுவப்படை அணியினரை 31 -15 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றனர்.
இந்த போட்டிகளில் இலங்கை கபடி சம்மேளன தலைவர் அனுரா பதிரன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.













