இலங்கை இராணுவக்கல்லூரியின் மருத்துவ மாநாடு.
3:00pm on Thursday 5th March 2020
இலங்கை  இராணுவக்கல்லூரியுடன் இணைந்து  இலங்கை  விமானப்படை  சுகாதார பணிப்பகம்  இணைந்து  '' மது அல்லாத  கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) சிறப்பு விழிப்புணர்வு புதுப்பிப்பு '' எனும் கருப்பொருளில் மருத்துவ மாநாடு   ஒன்றை கடந்த 2020 பெப்ரவரி 19 ம் திகதி கொழும்பு   கிங்ஸ் பெரி ஹோட்டலில் நடாத்தியது.

இந்த நிகழ்வில்  விமானப்படை  சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜயவீர , கடற்படை காதார பணிப்பாளர் ரியர் அட்மிரல்  ஜயவர்தன  இராணுவப்படை காதார பணிப்பாளர்  பிரிகேடியர் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 இதன்போது வைத்தியர் நிலேஷ் ;பெர்னாண்டோபுள்ளை  அவர்களினால் விலைமதிப்பற்ற விரிவுரையை உள்ளடக்கியது கருத்துக்கள்முன்வைக்கப்பட்டது  அதனைத்தொடர்ந்து ஆலோசகர் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வைத்தியர்  உதித்த தசநாயக , அனுராதபுர போதனா வைத்தியசாலையின் ஆலோசகர்  ஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஹெபடாலஜிஸ்ட் வைத்தியர்  ஜெயமாலி ஜயவீர, கொழும்பு  விமானப்படை  வைத்தியசாலை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபேஷ் சோனாவ்னே ,இந்தியாவில் இருந்து வருகைதந்த காஸ்ட்ரோஎன்டாலஜி மூத்த ஆலோசகர், போன்றோரினால் "NAFLD நோயாளிக்கு அணுகுமுறை",“வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்”, “என்ஏஎஃப்எல்டி மருந்தியல் சிகிச்சையில் புதுப்பிப்புகள்” மற்றும் “சிரோசிஸ் நோயாளியின் மேலாண்மை”. போன்ற தலைப்புகளில் விவாதம்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் முப்படை மற்றும் போலீஸ் பிரிவை சேர்ந்த 60 ம் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள்  கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை