
21வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் ஆரம்பம்
21வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கடந்த 2020 மார்ச் 05 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் விமானப்படை தலைமை காரியாலத்தின் முன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டிகள் விமானப்படையின் 69 வது வருட நிகழ்வை முன்னிட்டு ஆரம்பிக்கபட்டன இந்த போட்டிகள் அனுராதபுர விமானப்படை தளத்தில் நிறைவு பெரும் என்பது குறிப்பிட்ட தக்கது.
இந்த போட்டிகள் 3 கட்டமாக இடம்பெற உள்ளது இதன் முதல்கட்டமாக கொழும்பு தொடக்கம் கண்டி வரை 126 கிலோமீட்டர் தூரம் கொண்ட போட்டிகளாகும் சுமார் 150 போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றினார். இந்த போட்டிகள் ஜா எல மற்றும் நிட்டம்புவ , கேக்கல்லே மற்றும் மாவனல்லை பகுதியினூடாக பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதன்மை அனுசரணையாளர்களாக ஷாப்ட்லாஜிக் நிறுவனமும் ஊடக அனுசரணையாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் வானொலி அனுசரணை ஹிரு எப் எம் நேரடி ஒளிபரப்பு அனுசரணை சேனல் ஐ தொலைக்காட்சியும் இணைந்து கொண்டனர்.
















