
21 வது விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டி தொடரில் இலங்கை இராணுவ படை அணியினர் வெற்றி பெற்றனர்.
மூன்று நாட்களாக இடம்பெற்று வந்து விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டி தொடரை இலங்கை இராணுவ படையினர் கைபற்றினர். இதன் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெற்றியை இராணுவை படையினர் வெற்றி கொண்டனர் இதன் விருது வழங்கும் வைபவம் விமானப்படை தளபதி ஏயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் தலைமையில் அனுராதபுரம் பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த போட்டி தொடரில் இராணுவ படையை சேர்ந்த துஷன் ராஜபக்ஷ் மற்றும் உதேசானி நிரஞ்சனா ஆகியோர் ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர். இந்த போட்டித்தொடரானது ஆண்கள் பிரிவுக்கு 449 கிலோ மீட்டர் தூரத்தையும் பெண்கள் பிரிவில் 110 கிலோ மீட்டர் தூரத்தையும் கொண்டதாக காணப்பட்டது .
Men's Race
Women's Race
Awards Ceremony