விமானப்படையினர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு பொருட்களை சுகாதார அமைச்ச்சுக்கு கைய்யளித்தது.
12:25pm on Thursday 16th April 2020
விமானப்படையினர் உள்நாட்டில் தயாரித்த பாதுகாப்பு தனிப்பட்ட உபகரணங்கள் 500 கடந்த மார்ச் 23 ம் திகதி சுகாதார அமைச்சிடம் கையயளித்து. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் மேட்பார்வையின்கீழ் கட்டுநாயக்க சாதாரண பொறியியல் பிரினால் இது தயார் செய்யப்பட்டது.
கட்டுநாயக்க சாதாரண பொறியியல் படைப்பிரிவானது நாட்டின் தற்போதய தேவை கருதி 24 மணிநேரமும் தனது சேவையை செய்துகொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .கோவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளை பராமரிப்பதற்காக இந்த பொருட்கள் வைத்தியர்களுக்கும் பராமரிப்பாளர்க்ளுக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கு இது உதவுகிறது.
இந்த தயாரிப்புக்களை பார்வையிட விமானப்படை தளபதி அவர்கள் கடந்த மார்ச் 24 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திற்கு சென்றார்.
இந்த தயாரிப்புக்களை பார்வையிட விமானப்படை தளபதி அவர்கள் கடந்த மார்ச் 24 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திற்கு சென்றார்.
இதன் முதல் 500 தயாரிப்புகளை கையளிக்கும் வைபவத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி சந்திராணி ஜயவர்தன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பளார் திரு.வைத்தியர் அணில் ஜெயசிங்க ஆகியோரிடம் கையாளிக்கும் வைபவம் இடம்பெற்றது இந்த நிகழ்வில் கட்டுநாயக்க சாதாரண பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் இந்திக விக்ரமசிங்க சாதாரண பொறியியல் பிரிவின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் அன்ரு விஜயசூரிய, விமானப்படை சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேநேரத்தில் அனுராதபுர சாதாரண பொறியியல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 100 துணி துண்டுகள் அனுராதபுர வைத்தியசாலைக்கு அனுராதபுர விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுமணவீர அவர்களினால் கையளிக்கப்பட்டது.