கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து விமானப்படை வீரர்கள் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்கள் விநியோகம் செய்தனர்.
8:36pm on Friday 17th April 2020
கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட 50,000 வரிய குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான உலருணவு விநியோகம் நிகழ்வுகள் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து விமானப்படை வீரர்கள் கடந்த 2020 மார்ச் 31 ம் திகதி விநியோகம் செய்த்தனர்.
விமானப்படையினருக்கு கொழும்பு மாநக ர சபையினால் அடையாளம் காணப்பட்டு தேர்தெடுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விநியோகிப்பதற்கு இந்த உலருணவு பொருட்கள் கையளிக்கப்பட்டன.
மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக அவர்களின் வேண்டுகோளின்பேரில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி தரைவழி செயற்பாட்டு படைப்பிரிவினரால் கொழும்பு விநியோகம் நகரத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
03 நாட்களாக இந்த வேலைத்திட்டம்கள் இடம்பெறும் இந்த பொதிகளில் 10கிலோ அரிசி , பருப்பு, கோதுமை,சீனி , மீன்டின் , தேயிலை , யஹபோசா , கிறீன் கிராம் என்பன உள்ளடங்குகின்றது. 200 விமானப்படை வீரர்கள் மற்றும் 10அதிகாரிகள் அடங்கலாக இந்த குழுவினர் கட்டுநாயக்க , ரத்மலான, மற்றும் ஏக்கல விமானப்படை தளங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட்டனர்.