முல்லேரியா வைத்தியசாலையில் கொவிட் 19 நோயாளிகள் பிரிவுக்கு விமானப்படையினால் கண்காணிப்பு கேமரா மற்றும் பிஏ சிஸ்டம்ஸ் என்பன அமைத்துக்கொடுக்கப்பட்டது .
3:54pm on Monday 11th May 2020
விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனை படி மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்  பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்  பந்துல ஹேரத் அவர்களின் மேட்பார்வையின்கீழ்  முல்லேரியா வைத்தியசாலையின் 04 வாட்டிற்கு  ரத்மலான  விமானப்படை தளத்தின்  தொழில்நுட்ப பிரிவினால்  கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிபெருக்கி அமைப்பு என்பன கடந்த 2020 ஏப்ரல் 09 ம் திகதி  நிறுவப்பட்டது.

இந்த  அமைப்பினால்  மருத்துவ ஊழியர்களினால்  நோயாளிகளை அவதானிக்கவும்  பாதுகாப்பான முறையில் தகவல்களை  பரிமாறிக்கொள்ளவும்  முடியும் இதன்மூலம்  அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.

ரத்மலான விமானப்படை தளத்தின் மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவு கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் அருண ஜயதிலக்க அவரக்ளின் மேட்ர்பார்வையின் கீழ்  இந்த வேலைத்திட்டம்கள் இடம்பெற்றன மேலும் அப்படைப்பிரிவினரால்  24 மணிநேர கண்காணிப்பும் இடம்பெறுகின்றது.

விமானப்படை  உயிரியல், வேதியியல், கதிரியக்க மற்றும் அணு வெடிபொருட்களுக்கு பதிலளிக்கும் படைப்பிரிவினார்  அங்கு கடமையாற்றும்  பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உடைகள் உபகாரணம்கள் என்பன வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை