இலங்கை விமானப்படையின் 'ஹரிதா தனாவ்வா- நகர்ப்புற மற்றும் வீட்டு தோட்ட' திட்டம்.
11:48am on Wednesday 13th May 2020
கொவிட் 19 தொற்றின் காரணமாக  நாடுபூராவும்  முடக்கப்பட்டுள்ள  இந்த சந்தர்ப்பத்தில்  'சௌபாக்ய' எனும்  ஒரு மில்லியன்  வீட்டுத்தோட்டம்  திட்டம்  அரசாங்கத்தினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகலாவியரீதியில்  உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள  நிலையில்  இலங்கையில்  அவ்வாறான  நிலையை கட்டுப்படுத்தும் முகமாக  வீட்டுத்தோட்டம்  செய்வதன்மூலம்  இந்நிலையை கட்டுப்படுத்த  இலங்கை  விமானப்படையின்   வேளாண்மை பிரிவினால்  விதைகள்  பொதிசெய்யப்பட்டு விநியோகம் செய்யும் வேலைத்திட்டம்  விமானப்படை  சேவா வனிதா  பிரினால்  ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் இலங்கை விவசாய  திணைக்களம்  என்பன இணைந்து  “ஹரிதா தனாவ்வா- நகர்ப்புற மற்றும் வீட்டு தோட்டம்''  எனும்  திட்டத்தை  கடந்த 2020ஏப்ரல் 10 மதிக்காது அறிமுகம் செய்தது.  இந்த திட்டத்தின் நோக்கம் இலங்கையில் ஒரு தன்னிறைவு பெற்ற வீட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், நமது நாட்டின் இளைய தலைமுறையினரை சௌபாக்ய  தேசிய அறுவடை திட்டத்தின் புதிய கருத்தாக்கத்துடன் ஈடுபடுத்துவதும் ஆகும்.

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கும் வகையில் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால்  விமானப்படை  வேளான்மை பிரிவினால் தயாரிக்கப்பட்டு பொதிப்படுத்தப்பட்ட   விதைகள் 500 ( பாக்கெட்கள் ) கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  லேப்ரோய் அவர்களிடம் கையாளிக்கப்பட்டது .

விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள  டயஸ் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி மயூரி பிரபவி டயஸ் ஆகியோர்தங்களது  அலுவலகத்தின் வீட்டுத் தோட்டத்தில் விதைகளை நட்டனர்.    


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை