பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர்களை அடையாளம் காணப்பதற்கான புதிய நிலையம் ஓன்று திறந்துவைப்பு
9:11am on Monday 8th June 2020
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ் பாணந்துறை  ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர்களை அடையாளம் காணப்பதற்கான புதிய  நிலைய கட்டிட  வேலைத்திட்டம் கடந்த 2020 மே 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம்  மருத்துவ ஊழியர்கள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயுடன் தொடர்ந்து போராடும் பாணந்துறை  மருத்துவமனையின் அனைத்து நோயாளிகளின் பாதுகாப்பிற்காக பாணந்துறை  மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டது. இந்த மையம் மூலம் நோயாளிகளின்  நிலையை கண்டறிந்து  அதற்கான   சிகிச்சையின் முன்னுரிமையை தீர்மானிக்கும் செயல்முறையை  செயற்படுத்துகிறது .

இந்த வளங்கள் இருந்தால் நோயாளிக்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த முறை நோயாளிக்கு அவசர சிகிச்சை, அவசர போக்குவரத்து அல்லது மருத்துவ சிகிச்சையின் முன்னுரிமையை தீர்மானிக்க உதவுகிறது.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  சிவில் பொறியியல் பிரிவின்  அதிகாரியான ஸ்கொற்றன் லீடர் கசுன் விக்ரமதுங்க அவரக்ளின்  தலைமையில்  15 அங்கத்தவரக்ளின் பங்களிப்பில் 12 நாட்களில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு யேசுபாலி  குடும்பம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிதியளித்தன. கோவிட் 19 தொற்றுநோயிலிருந்து உங்களையும் உங்கள் நாட்டையும் பாதுகாக்கும் சிறப்புத் திட்டமான 'பெரமகா'வின் கீழ் இது முதல் திட்டமாகும்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஹேமாஸ் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முர்தாஸ் யேசுபாலியின் மனைவி அவந்தி யேசுபாலி  இந்த மையத்தை  கடந்த  2020 மே 28ம்  திகதி  திறந்து வைத்தார். மேலும் விமானப்படை அதிகாரிகள்  உட்பட பிரமுகர்கள்  கலந்துகொண்டனர்.


During the Construction

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை