சோமவதி ராஜ மஹா விகாரையில் புதிதாக ஹெலிபேட் திறந்துவைப்பு
10:14am on Tuesday 23rd June 2020
கிமு இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் சோமாவதிய ரஜமஹா விகாரை மகாவேலி ஆற்றின் இடது கரையில் உள்ள சோமாவதிய தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், சோமாவதி பகுதி கடும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது, இதன் விளைவாக பல யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இலங்கையின் ஆயுதப்படைப்பிரிவின் தளபதியுமான இலங்கை   சோசலிச சனநாயக  குடியரசின்  தலைவருமான  அதிமேதகு ஜனாதிபதி  கோட்டபாய ராஜபகஷ அவரக்ளின்  அறிவுறுத்தலின் கீழ்  இலங்கை  விமானப்படையினால்  உயர்த்தப்பட்ட  ஹெலிபேட் ஓன்று நிறுவப்பட்டது. வெள்ளப்பெருக்கு காலப்பகுதிகளில் விமானப்படையின் ஹெலிகாப்டர்ஸ் மூலம்  மீட்புப்பணிகள் மேற்கொள்ளமுடியும் என்பதறக்காக.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  கட்டளைக்கு இணங்க  கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவினால் 50பேர் கொண்ட குழுவிற்கு பிளைட் லேப்ட்டினால் நுவான் அவர்களின் தலைமையில் இந்த  ஹெலிபேட் நிறுவப்பட்டது இதற்கான  அணைத்து தேவைப்பாடுகள் மற்றும்  தளபாட உதவிகள்  ஹிங்குராகோட  விமானப்படை  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தம்மிக்க டயஸ் அவர்களின் பங்களிப்பில் இடம்பெற்றது .

பூர்த்தி செய்யப்பட்ட ஹெலிபேட்  அதிமேதகு ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச  அவர்களினால்  கடந்த (30 மே 2020) அன்று  திறந்து வைக்கப்பட்டு   சோமாவதிய ராஜமஹா விஹாராயாவின் தலைமை விகாராதிபதி  வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கலா தேரோவிடம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் முன்னிலையில் கைய்யாளிக்கப்பட்டது .  இந்த நிகழ்வில்  ஹிங்குரகோட விமானப்படை தளபதி மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை