இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சீன மக்கள் குடியரசின் தூதரகத்தினால் நன்கொடை திட்டம் .
10:35am on Tuesday 23rd June 2020
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சீன மக்கள் குடியரசின் தூதரகத்தினால் ஒரு தொகை பணம் நன்கொடையாக கடந்த 2020 ஜூன் 08 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது .
இதனை சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி சீனியர் கேணல் வான் டோன்ங் அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களிடம் கைய்யளித்தார்.
இந்த தொகையினை விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் முன்னெடுத்து நடாத்தப்படும் பாலர் பாடசாலை அபிவிருத்தி மற்றும் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
இதன்போது உரைநிகழ்த்திய விமானப்படை தளபதி அவர்கள் சீன தூதரக அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.