இலங்கை விமானப்படையின் முதலாவது ஸ்னைப்பர் பயிற்சிநெறி அம்பாறை விமானப்படை தளத்தில்.
7:25am on Wednesday 1st July 2020
விமானப்படையில்  ரெஜிமென்ட் பிரிவுக்கான  பாதுகாப்பு விசேட  ஸ்னைப்பர்  பயிற்ச்சி  பாடநெறி   முதல் முதலாக அம்பாறை  விமானப்படை தளத்தில்  ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ்  அவர்களின்  அறிவுரைப்படி   விமானப்படை  தரைப்படை   செயற்பாட்டு  பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  ரொட்ரிகோ அவரக்ளின்  வழிகாட்டலின்கீழ்  இந்த பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படையினால்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இல 01 பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கி சுடும் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு  அம்பாறை  ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலையில்  அம்பாறை  விமானப்படை கட்டளைஅதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாடோ  அவர்களின்  தலைமையில்   ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பாடநெறியில்  மேம்பட்ட அறிவு மற்றும் திறன், வரம்பு மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் திறன்களைக் கொண்ட தற்காப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட தாக்குதல் கொண்ட  துப்பாக்கி சுடும் வீரராக மாறுவதற்கு, அதிக தகுதி வாய்ந்த மற்றும் துப்பாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களுக்கு இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சிநெறியில் 12 பேர் முதல்கட்டமாக  தெரிவுசெய்யபட்டுள்ளனர் . இந்த பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்கள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகள், விமானப்படை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றின் கடமைகளை ஏற்க தகுதியுடையவர்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை