மத்திய ஆபிரிக்க நாடுகளில் கடமைபுரியும் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவினரால் மற்றுமொரு சமூகசேவை திட்டம்.
மத்திய ஆபிரிக்க நாடுகளில் கடமைபுரியும் இலங்கை  விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவினரால் மற்றுமொரு  சமூகசேவை திட்டம்  கடந்த 2020 ஆகஸ்ட் 31 ம் திகதி  மத்திய ஆப்பிரிக்காவின் கொலாகா  பிரியா  பிரதேசத்தில் இடம்பெற்றது

தொற்றுநோய் காரணமாக இதுபோன்ற திட்டங்கள் எதுவும் சமீபத்தில் நடத்தப்படாததால், பல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த நிகழ்விலிருந்து பயனடைந்தனர். இதன்போது எழுதுபொருள், பொம்மைகள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குழந்தைகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்  இருதரப்பினருக்கும்  துணிகள்  அன்பளிப்பு செய்யப்பட்ட்டன  இந்த  நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும்  பலன்கள் கிடைக்கப்பெற்றன.

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கசுன் வன்னியராச்சியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவின் அனைத்து உறுப்பினர்களின் மகத்தான ஆதரவும், இதயப்பூர்வமான அர்ப்பணிப்பும் இந்த பணியின் வெற்றிக்கு பங்களித்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை