'நமக்காக நாம்' வீடமைப்பு திட்டத்தின் வீடு வழங்கும் வைபவம்
3:48pm on Thursday 3rd November 2011
கிழக்கு மாகாணத்தின் அம்பறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 6ஆம் கட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 14 வீடுகள் கடந்த 19.10.2011 திகதியன்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் போர்வீரர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வுகள் அம்பாறை திவுலனா மகா வித்தியாலயத்தில் இடமபெற்றது. இதன் போது போர்வீரர் சாஜன் ஜயரத்தினவின் வீட்டை பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவரகள் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற "ரிய அட்மிரால்" மொகான் விஜயவிக்கிரம, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்தின, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் நிர்மானிக்கப்பட்ட  வீடுகளுக்கான திறப்புகள் இராணுவத்தை சேர்ந்த 13 போர்வீரர்களுக்கும், கடற்படையைச் சேர்ந்த போர்வீரர் ஒருவருக்கும் ஜனாதிபதி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை